மாத ஊதியம் பெறுவோருக்கு மத்திய பட்ஜெட்டில் 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இதில், மாத சம்பளம் பெறுவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல, ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு வருமான வரி உச்சவரம்பாக 25 சதவீதம் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் நிலையான கழிவு வரம்பு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த பட்ஜெட்டில் இந்தத் தொகை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.