இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி சென்னை அறம் ஐஏஎஸ் அகாடெமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஜப்பானில் நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்ததை மேற்கோள்காட்டி பேசினார்.
அப்போது நேதாஜியின் ராணுவத்தில் 6 ஆயிரம் தமிழர்கள் சேர்ந்த போதிலும், அதில் 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும், வரலாற்றில் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.