கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கைகளில் நாய்கள் ஏறி படுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள வார்டில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கைகளில் தெரு நாய்கள் படுத்து சேதப்படுத்திய காட்சி இணையத்தில் வைரலானது.
மேலும், நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறை முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், செடிகள் வளர்ந்து பயன்படுத்தவே முடியாத அளவில் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால், சுகாதாரத் துறை உடனடியாக இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.