கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, குளத்தில் ஆட்டோ பாய்ந்து, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினர்.
திக்கணங்கோடு பகுதியில் இருந்து கருங்கல் நோக்கி, மது போதையில் ஒருவர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார்.
மண்ணூர்குளம் அருகே திக்கணங்கோடு சாலையில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரம் குளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் காயங்கள் ஏதுமின்றி உயிர்தப்பினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஆட்டோ மற்றும் ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.