டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் நல்ல செய்தி வெளியாகும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதை அடுத்து மதுரை அ.வல்லாளப்பட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக விவசாயிகள் குழுவுடன் மத்திய அமைச்சரை சந்தித்த பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் டங்ஸ்டன் விவகாரத்தில் நல்ல செய்தி வெளியாகும் என தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அ.வல்லாளப்பட்டி மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.