சபரிமலை ஐயப்பன் கோயிலில் டோலி சேவை ரத்து செய்யப்படும் என கேரள அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மலையேற சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக டோலி சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை 250 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான கட்டுமான பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் வாசவன், ரோப் கார் சேவை கொண்டு வரப்பட்டால் சபரிமலைக்கு பக்தர்களை சுமந்து செல்லும் டோலி சேவை ரத்து செய்யப்படும் என கூறினார்.
இதனால், வாழ்வாதாரம் இழக்கும் டோலி தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.