விடுதலைக்கு அயராது பாடுபட்ட நேதாஜியின் தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்து போராடியவருமான நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.
தேசத்தை அன்னியர்களின் கைகளில் இருந்து மீட்டெடுக்கும் வகையில், இந்திய இளைஞர்களை உத்வேகப்படுத்திய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தனது வீர உரைகளின் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் சுதந்திரப் போரில் ஈடுபட்டதாகவும் அவர் கூறிள்ளார்.
தன்னலமற்ற தியாகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, இந்திய விடுதலைக்கு அயராது பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வீர தீர தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என்றும் எல்.முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.