அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 9 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் காணப்படுகிறது. டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில் காணப்படும் பனிப்புயலால் 2 ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெக்சாஸ், ஜார்ஜியா, மில்வாகீ பகுதிகளில் பனிப்புயல் தாக்கத்தால் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு பனிப்புயல்கள் மற்றும் அடர்பனியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.