இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்டாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் லக்ஷயா சென் ஜப்பான் வீரருடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய லக்ஷயா சென், 21க்கு 9, 21க்கு 14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.