சென்னை புறநகரில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Jul 20, 2025, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை புறநகரில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 23, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் இல்லாத வகையில் சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

சென்னையில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சென்னையில் ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சென்னையில் தனியார் மூலம் மாநகரப் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதித்திருப்பதை, போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சென்னையில் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசிய மாநகரப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், “சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும். 25 கிமீ வரை மினி பேருந்துகளை இயக்காமல், 6 முதல் 8 கிமீ வரை மட்டுமே இயக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அப்படியானால், போதிய எண்ணிக்கையில் மினி பேருந்துகளை இயக்குவதற்கான திறன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு இருப்பதாகத் தான் பொருள். ஆனால், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனரின் எதிர்ப்பையும் மீறி தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன? என்றும் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளள்ர்.ங

சென்னையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மினி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இப்படி ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவேளை சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான உரிமங்கள் எற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அது சட்ட விரோதம் ஆகும். அவ்வாறு உரிமங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும். அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Tags: AlandurValasaravakkamprivate mini busesManalitamil nadu governmentanbumani ramadossAmbatturPMK leader Anbumani RamadossSholinganallur
ShareTweetSendShare
Previous Post

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மளிகைப் பொருட்கள் பறிமுதல்!

Next Post

பாலக்காட்டில் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்!

Related News

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

ஆடி கிருத்திகை – பழனி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பொறியியல் படிப்புகளுக்கான முதற்சுற்று கலந்தாய்வு – கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர ஆர்வம்!

தமிழக கோயில்களின் வரவு செலவு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – இந்து முன்னணி செயற்குழுவில் தீர்மானம்!

கிட்னிக்கு ரூ. 5 லட்சம், திருச்சியில் அறுவை சிகிச்சை – வெளியானது ஆடியோ!

ஸ்ரீபெரும்புதூர் அருகே வேறொருவருடன் பழகிய காதலி – கொலை செய்த காதலன்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!

வாகன விபத்து குறித்து தவறான தகவல் பரப்பியதாக புகார்- மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் மரணம்!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் – 104 பாலஸ்தீனியர்கள் பலி!

கீழ் திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர்!

நீர் வரத்து உயர்வு – குற்றாலத்தில் எந்த அருவியில் குளிக்கலாம்?

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

ஆடி கிருத்திகை – அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies