FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தார்.
இதனால் FIDE தரவரிசையில் அவர் 2 ஆயிரத்து 784 புள்ளிகளுடன் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்த முன்னேற்றம் காரணமாக நீண்ட காலமாக அதிக புள்ளிகளை கொண்ட இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை தற்போது குகேஷ் முந்தியுள்ளார்.
நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தில் தொடர்கிறார்.