தேனியில் நீதிமன்றம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்மநபர் ஒருவர் அவரை கத்தியால் குத்த முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், அங்கிருந்து தப்பியோடி அருகில் இருந்த தங்கும் விடுதியில் தஞ்சம் அடைந்தார். ஆனால் விடாமல் துரத்திய அந்த நபர், விடுதிக்குள் வைத்து பிரசாந்த்தை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பிரசாந்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த நபருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.