ராணிப்பேட்டையில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், விஜயகணபதி ஆகியோர் மீது கடந்த 16-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
இதில், படுகாயம் அடைந்த இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.