வேறுபட்ட கட்டண நிர்ணய விவகாரத்தில் OLA மற்றும் UBER நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாடிக்கையாளர்கள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யும்போது, ஆண்டிராய்டு போன்களில் ஒரு கட்டணமும், ஐபோன்களில் ஒரு கட்டணமும் நிர்ணயம் செய்ததாக OLA மற்றும் UBER நிறுவனங்கள் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.