பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை நிறுத்தும் டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத வெளிநாட்டு பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின் குடியுரிமை வழங்கப்படாது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்நாட்டில் உள்ள வெளிநாடுகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பிப்ரவரி 20ம் தேதிக்குள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்பொருட்டு மருத்துவனைகளில் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே ட்ரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள், பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என தெரிவித்தனர். மேலும், 14 நாட்களுக்கு இந்த உத்தரவை நிறுத்தி வைக்கவும் அவர்கள் ஆணை பிறப்பித்தனர்.