நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சட்ட விரோதமாக கூடியதாக 180 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈ.வெ.ராமசாமி குறித்த கருத்தை கண்டித்து நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டு ஈவெரா உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 870 பேர் மீது 3 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது சீமான் வீட்டில் உருட்டு கட்டைகளுடன் 150 ஆண்கள், 30 பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் ஈவெரா உணர்வாளர்களை தாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பேரில், சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்