76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இறுதி அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை அருகே நடைபெற்றது.
சென்னையில் மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றிவைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணி வகுப்புகள் நடைபெறும். இதற்கான இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெறும்.
ஆனால், தற்போது அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், உழைப்பாளர் சிலை எதிரே குடியரசு தின விழா நடைபெற உள்ளது.