ஹாக்கி இந்தியா லீக் தொடரில், ஐதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் தமிழக அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஒடிஷா மற்றும் ராஞ்சியில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா லீக் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒடிசாவில் தமிழகம் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது.
இரு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்ததால் ஆட்டம் சமன் அடைந்தது. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், நான்கிற்கு மூன்று என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி, தமிழக அணி வெற்றி பெற்றது.