டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த பிறகு மதுரை திரும்பிய விவசாய குழுவினருக்கு கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, நேற்று டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், டெல்லி சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த 7 பேர் கொண்ட விவசாயிகள் குழு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு கிராம மக்கள் மற்றும் பாஜகவினர் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது