2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 10, 2025, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 24, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கக் கனிமவளக் கொள்ளை கும்பலை திமுக நம்பியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் முழுவதுமே, கனிமவளங்கள் கொள்ளைப்போவது தொடர்கதை ஆகியிருக்கிறது. திமுகவின் ஆசியுடன், கரூர் கேங், புதுக்கோட்டை கேங் என இரு கும்பல்கள் தலைமையில், தமிழகம் முழுவதும் கனிமவளங்களைக் கடத்தி, கேரளாவுக்கு விற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையுமே அழித்துவிட்டுத்தான் ஓய்வார்கள் என்பது போல அவர்கள் நடவடிக்கை இருக்கிறது. தமிழகத்தில் கனிமவளங்களைப் பாதுகாக்கப் போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவளக் கொள்ளையர்களை எதிர்த்துப் புகார் அளித்த சமூக ஆர்வலர்  ஜெகபர் அலி, கனிமவளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

கனிமவளக் கொள்ளையைப் பற்றி புகார் அளித்து வீடு திரும்பும் முன், கொள்ளையர்களுக்கே புகாரைக் கசியவிட்டு, சமூக ஆர்வலர்களின் உயிரைப் பறிக்கும் வகையில் ஒரு காட்டாட்சியை நடத்தி வருகிறது.

இந்த Disaster மாடல் திமுக அரசு திமுக ஆதரவோடு செயல்படும் புதுக்கோட்டை மற்றும் கரூர் கும்பல், கனிமங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளிடம் கமிஷன் வசூலித்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் கற்களை வெட்டி எடுப்பதோடு, அனுமதிச் சீட்டுக்களையும் முறைகேடாகப் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர் பயன்படுத்தி,கோவை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தொடர்ந்து பல விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதோடு, அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும், தமிழகத்தைச் சுரண்டுவதையே தொழிலாக வைத்திருக்கிறது திமுக. 2006 2011 வரையிலான காலகட்டத்தில், திமுகவினர் செய்த நில அபகரிப்பால், புதியதாக ஒரு விசாரணைத் துறையே உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது. தமிழகம் முழுவதும் மலைகளை உடைத்து, மணலைத் திருடி. கனிம வளங்களைச் சுரண்டி. எதிர்காலத்தில் தமிழகத்திற்கு பருவமழை வருவதையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தங்கள் தோல்வி உறுதி என்பதை அறிந்து, தேர்தலின்போது, பணத்தை வாரி இறைக்க முடிவு செய்திருக்கும் திமுக, அதற்காக, பொதுமக்களையும், கனிமவளக் கொள்ளையை எதிர்ப்பவர்களையும் அச்சுறுத்தி, மிரட்டி, கொலையும் செய்து, கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக் கும்பலின் வசூலைத்தான் நம்பியிருக்கிறது என்பது கனிமவளக் கொள்ளையை திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் ‘கூறியுள்ளார்.

தங்கள் குடும்பத்துக்காக, பொதுமக்களைத் துன்புறுத்திக் கொள்ளையடித்த பல சர்வாதிகாரிகள், இறுதியில் பொதுமக்கள் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் காணாமல் போன பல வரலாறுகளை நம் காலத்திலேயே பார்த்திருக்கிறோம் பொதுமக்கள் எல்லை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது. இந்த Disaster மாடல் திமுக ஆட்சியின் கனிமவளக் கொள்ளையர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் திமுகவினர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கனிமவளக் கொள்ளை மூலம் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை சொத்துக்களும், சட்டப்படி மீட்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: social activist Jagabar Ali murdermineral theft gangPudukkottai GangKarur GangDMKWestern GhatsTamil Nadu BJP State President Annamalai2026 assembely election
ShareTweetSendShare
Previous Post

முட்டுக்கோவணம் கட்டி ஏர் ஓட்டிய விவசாயிகளுக்கு ஈ.வெ. ரா இழைத்திட்ட துரோகத்தை மறந்து விட்டீர்களா துரைமுருகன்? – நாராயணன் திருப்பதி கேள்வி!

Next Post

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கு – சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies