விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேம்புக்குடி சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் – விக்ரவாண்டி இடையே புதிய புறவழிச்சாலை (என்.எச்.45 சி) 164.28 கிலோ மீட்டர் தூரம் அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர் – சோழபுரம் இடையே 47.84 கி.மீட்டர் தூரம் ஒரு தொகுப்பாகவும், சோழபுரம் – சேத்தியாதோப்பு இடையே 50.48 கி.மீட்டர் தூரம் மற்றொரு தொகுப்பாகவும் என இரு தொகுப்புகளையும் படேல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் 80 சதவீதம் முடிவடைந்த நிலையில் தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை வேம்புக்குடியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.