புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் நீர்தேக்க தொட்டியில் இரண்டு நபர்கள் மலம் கலக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
வேங்கை வயல் நீர்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்து கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள், பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டின.
இந்த நிலையில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இரண்டு பேர் மலத்தை கலக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதேபோல் சுதர்சன் என்பவரின் தாயார் அவரை தொடர்புகொண்டு காவல்துறையிடம் உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடாது என்று தொலைபேசியில் பேசும் ஆடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.