இந்துமத வழிபாட்டு உரிமையில் திமுக அரசு விரோதமாக செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
பழனிபாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அரிட்டாப்பட்டி மக்களின் கோரிக்கையை ஏற்று டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டி ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இந்துமத வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தொடர்ந்து விரோதமாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர் சேகர்பாபுவையும் விமர்சித்துள்ளார்.