இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளை குறிக்கும் வகையில், தேசிய வாக்காளர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.
1950ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011 இல் இலிருந்து இது பின்பற்றப்படுகிறது. அதன்படி 15-வது தேசிய வாக்காளர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.