தஞ்சை பெரிய கோயிலில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு கடந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியே 37 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த போதும், பயணிகள் விடுதி, கழிப்பறை – குளியலறை, சுத்தமான குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வருங்காலங்களில் சுற்றுலாப் பணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலையில், அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தருமாறும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.