இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றிபெறும் என்ற நிலையை ஈரோடு கிழக்கு மக்கள் மாற்றி எழுத வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தேர்தல் பரப்புரையில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது, பொதுமக்களை ரூ.1,000-க்கு கையேந்த வைத்தது தான் திராவிட மாடல் என்றும், திமுக ஆட்சி நிறைவடையும் போது தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் கூறினார்.
படிப்பகங்களுக்கு பதில் குடிப்பகங்களை திமுக அரசு ஊக்குவிப்பதாகவும், “ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டார்.