பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பாரம்பரிய ‘ஹல்வா’ தயாரிப்பு நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் பாரம்பரிய ‘ஹல்வா’ விழா வெள்ளிக்கிழமை நார்த் பிளாக்கில் நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய கடைசி படியாக இந்த விழா அமைந்துள்ளது. பட்ஜெட் தயாரிப்பில் நேரடியாக ஈடுபட்டுள்ள நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாரம்பரிய இனிப்பு வகை ‘ஹல்வா’ தயாரித்து வழங்குவது நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.