குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல்துறை ஆய்வாளர் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு உள்ளே செல்லும் பயணிகள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் .
பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றது. மேலும், வரும் 30-ஆம் தேதி வரை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்ட போலீசார், பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர். ரயில் தண்டவாளங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.