சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் 2-வது டி 20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7 மணியளவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி போட்டியை காண வரும் ரசிகர்கள் மெட்ரோ, மின்சார ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.