திருப்பரங்குன்றம் மலையில் தமிழக அரசு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ்கனி எம்.பி உள்ளிட்டோர் அசைவம் சாப்பிட்டது சர்ச்சையான நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து அதற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள், நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவம் உண்ட இடத்தில் புனித நீரை தெளித்தனர்.
இதை தொடர்ந்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திருப்பரங்குன்றம் மலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என வேதனை தெரிவித்தார்.
கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், இதை கண்டிக்கும் விதமாக இந்து முன்னணி சார்பில் வரும் 4ம் தேதி போராட்டம் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.