திருப்பரங்குன்றம் மலையை வைத்து அரசியல் செய்யக்கூடாது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்ல என்றும், இதனால் பக்தர்கள் வந்து செல்வதில் கடும் சிரமம் உள்ளதாகவும் கூறினார்.
எனவே, இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து தேவையான அடிப்படை வசதிகளை பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருப்பரங்குன்றம் மலையில் முன்பு இருந்ததைப் போல வழிபாடு செய்ய வேண்டும் என்றும், தேவையில்லாமல் இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.