திருவள்ளூர் அருகே மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
பெரியராமாபுரம் கிராமத்தில் வசித்து வந்த ரகுபதி என்பவர் வெடியங்காடு புதூர் துணை மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் பொழுது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த நிலையில், மின்சார துறை அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி உடலை சாலையில் வைத்து இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவல்துறை அதிகாரிகளிடத்தில் கடும் வாக்குவாதம் செய்தனர்.