தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே தற்காலிக காய்கறி மார்க்கெட் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் முழுவதும் மலை போல் குப்பைகள் தேங்கியிருப்பதால் சுகாதார சீர்கேடு எழுவதாக மார்க்கெட் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
மேலும் தூய்மை பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிர்வாகம் முறையாக குப்பைகளை அகற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர். இது குறித்து நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் கடந்த 23-ம் தேதி செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மாநகராட்சி நிர்வாகம் மார்க்கெட் முழுவதும் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றியது.