வேலூரில் ஆட்டோ பைனான்சியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்காநத்தம் ரோடு மகாவீர் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலூர் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பைனான்ஸ் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செந்தில்குமாரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அவரை கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.