சென்னை வளசரவாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் 6 கிராம் மெத்தம் பெட்டமைன், 10 கிராம் கஞ்சா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.