சேலம் அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் 6 பேருக்கு மேட்டூர் அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர், மேட்டூர் அணையில் உள்ள பூங்காவில் தினக்கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2015 -ம் ஆண்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த ராமு, சுரேஷ்குமார், பாலாஜி, சிவக்குமார், முருகன், தினேஷ் ஆகியோரை மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, மேட்டூர் அமர்வு நீதிமன்றத்தில் நிறைவு பெற்ற நிலையில், குற்றம் சாடப்பட்டுள்ள 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.