நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மலைப்பாதையில் தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி பழுதடைந்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரளா மாநிலத்தில் இருந்து தேங்காய் லோடு ஏற்றி வந்த சரக்கு லாரி கூடலூர் அருகே கீழ்நாடுகாணி மலைப்பாதையில் பழுதடைந்து நின்றது.
இதனால் மலைப்பாதையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.