தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லி, பிச்சி உள்ளிட்ட பூக்களின் சாகுபடி கணிசமாக குறைந்த நிலையில், தென்காசி, சங்கரன்கோவில், சிவகாமிபுரம் சந்தைகளுக்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மல்லிகைப்பூ கிலோ 4 ஆயிரம் வரையிலும், பிச்சிப்பூ கிலோ ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், கனகாம்பரம் பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.