திருச்செந்தூர் அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மதுரையை சேர்ந்த இளைஞரின் எலும்புகளை, 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் தோண்டி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்த சித்துராஜ், போதை பழக்கத்திற்கு அடிமையானதால் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் உள்ள பிரபல போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் 2020-ம் ஆண்டு மாயமானதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சித்துராஜ் மனைவி மற்றும் தனியார் மது போதை ஒழிப்பு மைய உரிமையாளர் ரவீந்திரன், அங்கு பணிபுரிந்த கண்ணன் ஆகியோர் திருச்செந்தூர் அருகே தேரிப்பகுதியில் சித்துராஜை கொலை செய்து புதைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் தலைமையில், சித்துராஜ் உடலை தோண்டி எடுத்து எலும்புத்துண்டுகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.