விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில், சுடு மண்ணால் ஆன பெண்கள் அணியக்கூடிய பழமையான காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விஜய கரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை தோண்டப்பட்ட 18 குழிகளில், உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன.
இந்நிலையில், புதிதாக தோண்டப்பட்ட குழி ஒன்றில் சுடு மண்ணால் ஆன காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் அணியும் ஆபரணங்களையும் அயல்நாட்டு வர்த்தகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.