தாய்லாந்தில் காற்று மாசுபாடு காரணமாக 350 பள்ளிகளை அந்நாட்டு அரசு மூடியுள்ளது.
உலகின் காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் பட்டியலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் 7-வது இடத்தை பிடித்துள்ளது.
அங்கு வசிப்பவர்கள் மோசமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கலால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி தலைநகர் பாங்காக்கில் 352 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதிக்கும்படி தனியார் நிறுவனங்களை அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.