தமிழக பாஜக சார்பில் 2ம் கட்டமாக மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஈரோடு வடக்கு மாவட்ட தலைவராக எஸ்.எம்.செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட தலைவராக விஜயேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட பாஜக தலைவராக செந்தில் நாதன் தேர்வாகியுள்ள நிலையில், சேலம் மேற்கு மாவட்ட தலைவராக ஹரிராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட தலைவராக சரவணன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நெமிலி ஆனந்தன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவராக கவிதா தேர்வு செய்யப்பட்டுள்ளள நிலையில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக ஜெயராமன் தேர்வாகியுள்ளார்.