நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்த நாளில், ஒரு ஜனநாயக நாட்டின் உறுதியான கொள்கைகளை வகுத்து, அதன் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் வெளிப்பாட்டை நிலைநிறுத்திய நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு மரியாதையுடன் தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.