சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட ஆளுநர், முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக முப்படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திர காவல்துறையின் அணிவகுப்பும் இடம்பெற்றது. மேலும், தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, குதிரைப்படை, ஊர்க்காவல் படையின் மகளிர் பிரிவு சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது.