குடியரசு தின விழா - கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
Sep 10, 2026, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தின விழா – கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 26, 2025, 11:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு தின விழாவில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

சென்னை கடற்கரை சாலையில், குடியரசு தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் மயிலாப்பூர் பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சப்பூதங்களின் பெருமைகளை பறைசாற்றும் விதத்தில் மாணவிகள் ஆடிய நடனத்தை ஆளுநரும், முதலமைச்சரும் கண்டு ரசித்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை அசோக் நகர் அரசு பள்ளி மாணவிகள் கோலாட்டமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்ப்பள்ளி மாணவிகள் சார்பில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகள் மயில்போன்று தோகை விரித்து நடனமாடி விருந்தினர்களை உற்சாகப்படுத்தினர்.

சென்னை ராணி மேரி அரசு கலைக் கல்லூரி மாணவிகளின் கண்ணை கவரும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழின் பெருமைகளை பறைச்சாற்றிய மாணவிகள், நடனத்தின் மூலம் பாரதிதாசன் உருவத்தை அமைத்தனர்.

சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். கரகம் மற்றும் சிலம்பாட்டத்தின் பெருமைகளை நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

சென்னை அம்பத்தூர் சோகா இகேதா கல்லூரி மாணவிகளின் கண்ணை கவரும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஒயிலாட்டம் ஆகியவற்றின் சிறப்புகளை வெளிப்படுத்திய மாணவிகளின் நடனத்தை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

இதனை தொடர்ந்து, அசாம் மாநிலத்தின் பர்தோய் சிகாலா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய இசைக்கு ஏற்ப பெண்கள் நடனமாடி அசத்தினர்.

குடியரசு தின விழாவில் தெலங்கானா நடன கலைஞர்களின் மாதுரி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பழங்குடிகளின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக மாணவ, மாணவிகள் நடனமாடினர்.

ஜம்மு – காஷ்மீர் கலைஞர்களின் கண்கவர் ரூப் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அறுவடைக் காலத்தின் பெருமைகளை குறிக்கும் வகையில் மாணவிகள் நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

இதனை அடுத்து தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்களை ஆடி கலைஞர்கள் அசத்தினர்.

Tags: republic day parade 2025Republic Day celebrationsrepublic day 2025 liverepublic day parade 2025 liverepublic day 2025 parade26 january26 january paradeMK Stalin26 january parade 2025Republic dayCultural programmeGovernor R.N.RaviRepublic Day parade
Share
Tweet
SendShare
Previous Post

முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

76-வது குடியரசு தினவிழா – அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு!

Related News

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies