தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
76வது குடியரசுத்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாய சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சரத்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள் மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தேசியத்தை போற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், வரும் 2026 -ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த ஆட்சியை அமைக்க சபதம் ஏற்போம் எனவும், தமிழகத்தில் 13 பேருக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார். முதல் பொதுக்கூட்டத்தில் ஆளுநர் வேண்டாம் என்று சொன்ன விஜய், பின்னர் அவரை நேரில் சென்று ஏதற்கு சந்தித்தார் என தெரியவில்லை என குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நடிகர் அஜித்குமார் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், , மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசுதான் முழுக் காரணம் எனவும் தெரிவித்தார்.