அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக தமிகம் மாறியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அப்பாவி கிராம மக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதைத் தடுத்ததற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ராமலிங்கம் தடை செய்யப்பட்ட PFI இயக்கத்தை சேர்ந்த அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் நகரில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரை இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் அமைதியை விரும்பும் மாநிலமாக அறியப்பட்ட தமிழ்நாடு, இன்று அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாதிக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கு, திமுக மற்றும் அவர்களது கூட்டாளிகளால் முன்னெடுக்கப்பட்ட மாநிலத்தில் நிலவும் ஆழமான வேரூன்றிய வாக்கு வங்கி அரசியலுக்கு எடுத்துக்காட்டு என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.