நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சிட்டம் அமலுக்கு வருகிறது.
திருமணம், விவகாரத்து, வாரிசுரிமை போன்ற விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டம் உள்ள நிலையில், அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
ஆனால், மத்திய அரசுக்கு முன்னதாகவே உத்தராகண்ட் மாநிலத்தில் அச்சட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி முடிவு செய்தார். அதனை நிறைவேற்றும் வகையில் கடந்தாண்டு அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. மதியம் 12.30 மணிக்கு பொது சிவில் சட்ட இணையதளத்தை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைக்கிறார்.