சென்னை சைதாப்பேட்டையில் குடியரசு தினத்தன்று மதுவிற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. ஆனால், சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விதிகளை மீறி மதுபானம் விற்றதாக கூறப்படுகிறது.
அத்துடன் அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக செயல்படும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனவும் மது விற்பனையாளரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.