மகாராஷ்டிர மாநிலம் புனேவில், G.B.S. எனப்படும் அரிய வகை நரம்பியல் குறைபாடால், முதல் மரணம் பதிவாகியுள்ளது.
புனேவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் எனப்படும் அரியவகை நரம்பியல் குறைபாடால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை, 101 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.